Google News
சென்னையில் சுமார் 4,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் இம்முறை சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் கூடுதல் சிலைகள் நிறுவ அனுமதி கோரி பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் சுமார் 4000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 10,000 போலீசாரும், தாம்பரம், ஆவடியில் 10,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Discussion about this post