Google News
எந்த ஒரை காலத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று சுபமாக நிறைவேறும் என்றும்,எந்த ஒரை காலத்தில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஓரை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் உச்சம் தொடலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 ஒரைகளும் சுப ஒரைகளாக போற்றப்படுகின்றன. இந்த ஒரை காலத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று சுபமாக நிறைவேறும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை அசுப ஒரைகளாகும். இந்த ஒரை காலத்தில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.
சந்திர ஒரை
மனம் தொடர்பான கிரகம் சந்திரம். ஏதாவது ஒரு காரணத்திற்காக உறவினர்களையோ, நட்புகளையோ சந்திர ஒரையில் சென்று சந்தித்தால் வெற்றி கிட்டும்,. மனதில் மகிழ்ச்சி மலரும்.
புதன் ஒரை
எழுத்து, ஆவணம், ஒப்பந்தம் தகவல் தொடர்பு தொடர்பான கிரகம் புதன். எனவே இந்த புதன் ஒரை நேரத்தில் பொருளாதார விருத்திக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, புதிய பத்திரங்கள் முடிப்பது, வீடு, நிலம், மனை போன்றவை தொடர்பான முடிவு மேற்கொள்வது வெற்றி தரும்.
குரு ஒரை
குரு என்பவர் வழிகாட்டுபவர். இந்த குரு ஒரையின் போது எந்த ஒரு புதிய செயல்களிலும் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். பயணம் மேற்கொள்வதற்கு உகந்த காலம். தொழில், வேலை, வியாபாரம் போன்றவை தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கும் இது தகுந்த நேரம்.
சுக்கிர ஒரை
சுகமான வாழ்வை கொடுப்பவர் சுக்கிரன். இந்த சுக்கிர ஒரையில் சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டால் மனமகிழ்ச்சி பன்மடங்கு பெருகும். மேன்மையான உறவுகள் அமையும் காலம் சுக்கிர ஒரை காலமாகும்.
சூரியன் ஒரை
சூரிய ஒரை காலம் என்பது சுகமான நேரம் அல்ல. இந்த நேரத்தில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.
சனி ஒரை
சனி ஒரை அசுப நேரமாகும். நற்காரியங்களை இந்த ஒரை நேரத்தில் செய்வதை தவிர்க்கவும்.
செவ்வாய் ஒரை
செவ்வாய் ஒரை என்பது அசுப ஒரையாகும். இந்த ஒரை நேரத்தில் எந்த ஒரு புதிய செயலையும் செய்ய வேண்டாம்.
Discussion about this post