Google News
நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.
சாபத்தின் தன்மையே வேறு. ஒருவர் பாவ காரியத்தை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம். சாபத்தை போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. காரணம் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே பாவம் செய்தவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
பாதிப்பிற்கு ஏற்ப சாபம் ஒரு கட்டத்தில் வேலை செய்யும். தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் சாபத்தின் கடுமை ஓரளவு நீங்க வாய்ப்புண்டு. இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பாதிப்பை செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் இன்னார் தான் என்று தெரிந்து அவர்கள் மறுபடியும் சந்திக்கும் போது மட்டுமே இது சாத்தியப்படும். சாப நிவர்த்திக்கு வழி உண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்து வரும். அதற்கு எங்கே போய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?
என்ன வாசகர்களே காஞ்சனா படம் பார்த்தது போல் இருக்கிறதா? பெண் சாபத்தை மட்டும் பிரதானமாக ஜோதிட உலகம் விமர்சிக்கிறதே? ஆண் சாபத்தை ஏன் கண்டு கொள்வது இல்லை என கேட்பதும் புரிகிறது. பெண்கள் மன வலிமை இல்லாதவர்கள். சிறிய தோல்வியை கூட தாங்கும் சக்தி அற்றவர்கள். அவர்களின் ஆயுதமே கண்ணீரும் சாபமும் தான்.
பெண்கள் கண்ணீர் விட்டாலே ஸ்திரீ சாபம் ஒட்டிக் கொள்ளும். ஆண்கள் மனம், உடல் வலிமை பெற்றவர்கள். எளிதில் தவறை, துரோகத்தை மறந்து மன்னித்து விடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். கடுமையான பாதிப்பு இருந்தால் ஆண் சாபமும் பாதிப்பை தரும். பெண்களால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக ஆண் சாபமும் தண்டனையை பெற்றுத்தரும். நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.
Discussion about this post