Google News
ஜி20 மாநாடு இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன், ஜி20 நாடுகளின் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் 2 நாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பங்கேற்கின்றனர். G20 கூட்டணி.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ள நம்பிக்கை குறித்து, அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த, பிஇடபிள்யூ., ஆய்வு மையம் சார்பில், சர்வே நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 2,611 பேர் உள்பட 24 நாடுகளைச் சேர்ந்த 30,861 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
பிப்ரவரி 20ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.பிரதமர் மோடியை மையப்படுத்தியும், இந்தியா குறித்து மற்ற நாடுகளின் கருத்துகளையும் மையமாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மீது மொத்தம் 46 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தாலும், 16 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குறிப்பாக இஸ்ரேல் மக்கள் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நாட்டைச் சேர்ந்த 71 சதவீதம் பேர் இந்தியாவை ஆதரித்தனர்
மேலும் மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிலையில் அவருக்கு ஆதரவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் 55 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு தீவிர ஆதரவு தெரிவித்துள்ளனர். தெளிவாக சொல்ல வேண்டுமானால், சர்வேயில் பங்கேற்ற 10ல் 8 பேர் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மாறாக, 10ல் 2 பேருக்கு பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், PEW கருத்துக்கணிப்பின்படி பிரதமர் மோடியின் புகழ் இன்னும் அப்படியே உள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் மோடி தலைமையிலான இந்தியாவை நம்புகிறார்கள்.
Discussion about this post