Google News
காஷ்மீரில் 3 அதிகாரிகள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து 5வது நாளாக ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டை தொடர்கிறது
காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜோரியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தின் கடோல் வனப் பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தபோது, ராணுவத்தின் கர்னல் மன்பிரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஹுமாயூன் பட் ஆகிய 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களை கொன்ற பயங்கரவாதிகள், வனப்பகுதிக்குள் பதுங்கினர். இதையடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
5வது நாள் வேட்டை
நேற்று 5வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. அப்போது, சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். வனப்பகுதி மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் குகைகள் மற்றும் புதர் முகாம்களில் மறைந்திருந்த கேமராவில் சிக்கியுள்ளனர். அதன் மூலம் அவர்களை நெருங்கி தாக்க திட்டம் தீட்டப்பட்டது.
ஒரு சிறிய அளவிலான பீரங்கி ஷெல் வெள்ளிக்கிழமை அத்தகைய மறைவிடத்தை தாக்கியபோது ஒரு பயங்கரவாதி தப்பி ஓடுவதை ஒரு ட்ரோன் கேமரா படம்பிடித்தது. இதேபோல் சில தீவிரவாதிகளும் கேமரா கண்களில் சிக்கியுள்ளனர்.
பொதுமக்களின் கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க போஸ் கிரீரி பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராணுவ அதிகாரி விரைந்தார்
நேற்றுமுன்தினம் வடக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, தேடுதல் வேட்டையாடும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேடுதல் மற்றும் தாக்குதல் உத்திகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள் அவருக்கு காண்பிக்கப்பட்டன.
“வனப் பகுதி முழுவதும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும், பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாலும், வலையில் சிக்கிய 3 பயங்கரவாதிகளும் பிடிபட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம்” என போலீஸார் தெரிவித்தனர். அது குறித்த தகவலை பாதுகாப்பு படையினர் பின்னர் வெளியிடுவார்கள் என தெரிகிறது.
Discussion about this post