Google News
சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கிய சிறப்பு அமர்வில் கடந்த 75 ஆண்டுகால இந்திய ஜனநாயக வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவை மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இன்று முதல் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் இருந்து பணிபுரிகின்றனர்
புதிய கட்டிடத்தில் இன்று முதல் நடைபெறும் கூட்டத்தில் என்ன நடக்கும் என உறுப்பினர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. சிறப்பு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று மக்களவை நடவடிக்கைகள் மதியம் 1.15 மணிக்கும், ராஜ்யசபா நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கும் புதிய பார்லிமென்ட் வளாகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா காவலர்கள் புதிய சீருடையில் வந்துள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாளை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறுகிறது. நாளை முதல் அரசு மசோதாக்கள் மீதான விவாதம் மற்றும் பரிசீலனை நடைபெறும்.
Discussion about this post