Google News
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதா, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடியதும் சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் முதல் அமலாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மக்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அதேபோல், ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை பெரும்பான்மையான கட்சிகள் ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
Discussion about this post