Google News
கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் நேற்று சந்தித்தனர். இதனிடையே, கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா இன்று (புதன்கிழமை) டெல்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக எம்.பி.க்கள் குழுவும் நேரம் கேட்டுள்ளது.
காவிரி விவகாரம் மற்றும் கர்நாடக அணைகளில் தற்போதைய நீர் இருப்பு தொடர்பாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய நேரம் ஒதுக்கினால் எம்.பி.க்கள் குழு பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post