Google News
முழு அடைப்பால் மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நிலவி வருகிறது. இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கலவரத்தை அடக்க மாநில காவல்துறையுடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பதட்டமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று சுரசந்த்பூர் மாவட்டத்தில் போலீசாரும், ராணுவ வீரர்களும் இணைந்து ரோந்து சென்றபோது, போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
இதனிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் தன்னார்வலர்கள் என்றும், எதிர் கட்சியினரிடம் இருந்து தங்கள் கிராமத்தை பாதுகாப்பதாகவும் கிராம மக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலைகளில் டயர்கள் மற்றும் மரக்கட்டைகளை எரித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
முழு அடைப்பு போராட்டம்
இதனிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி 5க்கும் மேற்பட்ட அமைப்புகள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் உட்பட அனைத்து வகையான வணிகங்களும் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் சீருடையை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post