Google News
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின் போது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவரது அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இதையடுத்து இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், அரசு பரிசுகளை விற்றதாக இம்ரான் கான் மீது ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கானின் எம்பி பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த மாதம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் அதிபர் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் இருக்கும் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடுவது கடினம். இதற்கிடையில், ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் இடைக்கால பிரதமராக இருந்த பலுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். அன்வர் உல் ஹக் காகர் தற்காலிக பிரதமராக செயல்படுவதால் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 26 ரூபாவாலும், டீசல் லீற்றருக்கு 17 ரூபாவாலும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கனவே பெட்ரோல் லிட்டருக்கு ரூ.305க்கு விற்கப்பட்டு வந்தது, தற்போது கூடுதல் வரியுடன் ரூ.331க்கு விற்கப்படுகிறது.
அதேபோன்று ஒரு லீற்றர் டீசல் 311 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.331க்கும், டீசல் ரூ.329க்கும் விற்கப்படுவது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல்முறை.
Discussion about this post