Google News
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது.
ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்து, அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியது. மக்கள் வசதிக்காக ஒரு சில இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் நடைமுறை இன்றும் உள்ளது.
இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
87 சதவீத நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டு படிப்படியாக புதிய நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி, செப்டம்பர் மாதத்திற்குள் படிப்படியாக நீக்கப்படும்.
எனவே, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் கைகளில் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே 97 சதவீத நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது.
Discussion about this post