Google News
அரசுக்குச் சொந்தமான பாங்க் ஆப் இந்தியா பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.2,000 கோடி மூலதனத்தை திரட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள வழக்கமான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
7.88 சதவீத கூப்பன் விகிதத்தில் அடுக்கு-2 கடன் பத்திரங்களை வழங்குவதன் மூலம் ரூ.2,000 கோடி மூலதனத்தை திரட்டியுள்ளோம்.
தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலத் தளம் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டது. ரூ.2,000 கோடி பத்திரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.3,770 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் கோரி 83 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தை அதிகரிக்கவும், நீண்ட கால நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும் இந்தத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அந்தத் தொகையானது எந்தவொரு குறிப்பிட்ட திட்டத்திற்கும் நிதியளிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post