Google News
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், உத்தரப் பிரதேசத்தில் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக உற்பத்தி ஆலையை அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் கார்பன் சமநிலை இலக்கை அடைய மாற்று எரிபொருளை மனதில் கொண்டு புதிய ஆலை கட்டப்படும். ஆலையை அமைக்க ரூ.1,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய ஆலை செயல்படத் தொடங்கினால், இது இந்தியாவின் 7வது வாகன உற்பத்தி ஆலையாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post