Google News
நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16ம் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 23.51 சதவீதம் அதிகமாகும்.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நேரடி வரி வசூலுக்கான முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.18.23 லட்சம் கோடி. இதில் 47.45 சதவீதம் இதுவரை எட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் செலுத்தும் முன்கூட்டிய வரி அதிகரிப்பால் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது.
தற்போதைய நேரடி வரி வசூலில் கார்ப்பரேட் வருமான வரி ரூ.4.16 லட்சம் கோடியும், பத்திர பரிவர்த்தனை வரி ரூ.4.47 லட்சம் கோடி உட்பட தனிநபர் வருமான வரியும் அடங்கும். 16ம் தேதி வரை வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1.22 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post