Google News
நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வினோத் குமார் தயாரித்துள்ளார். படத்தின் கதை காலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது.
செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் தொடக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் படத்தின் டீசரை நடிகர் விஜய்க்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, “இது என்னால் மறக்க முடியாத தருணம்” என்று கூறியுள்ளார். இந்த தருணத்திலிருந்து எல்லாம் சரியாக நடந்தது. மிக்க நன்றி விஜய் அண்ணா.
Discussion about this post