Google News
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பங்களாதேஷின் எல்லையில் உள்ளது. இங்கு இந்திய எல்லைக் காவல் படை வீரர்கள் ரோந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்து சோதனையிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் 23 கிலோ தங்கக் கட்டிகள் இருந்ததால், அவரை பாக்தா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதும், பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.14 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post