Google News
கடந்த 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் விற்பனையாளர்களை கண்டறிந்து கைது செய்யவும் தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 28ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 336 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.18 கோடி மதிப்புள்ள 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post