Google News
கொடைவிழாவையொட்டி மண்டைக்காட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்து சமய மாநாட்டுக்கு தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
கொடை விழாவின் போது ஏற்பட்டுள்ள பிரச்னையால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு கோயிலான பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் கடலில் குளித்து வழிபாடு செய்வது வழக்கம். இங்கு மாசி கொடை விழா பத்து நாட்கள் நடைபெறும்.
1980ல் கடலில் குளித்தபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நேரிடையாக வந்து அமைதிக் குழுவை அமைத்து அமைதியை நிலைநாட்டினார்.
நூற்றாண்டு மாநாட்டுக்கு தடை
இந்நிலையில், கொடை விழாவின் போது கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ள வியாபாரிகளிடம் சர்ச் நிர்வாகம் வாடகை வசூலிப்பதாக புகார் எழுந்தது.
மண்டைக்காடு ஊராட்சி நிர்வாகம், தேவாலய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் விசாரணை நடத்தி வருகிறார். இந்து சேவா சங்கம் நூறு ஆண்டுகளாக நடத்தி வரும் இந்து சமய மாநாட்டை இந்த ஆண்டு முதல் நடத்தக்கூடாது என தேவசம் போர்டு சார்பில் மண்டைக்காடு கோயில் மேலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜின் தாவல்
கலவரம் நடந்த ஆண்டிலும், எந்த புகாரும் இல்லாமல் மாநாடு நடத்தப்பட்டது. இதுவரை நடந்த மாநாடுகளில் கேரள கம்யூன் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டும் கேரளா மற்றும் தெலுங்கானா ஆளுநர்கள், மத்திய மற்றும் கேரள அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிலையில் தேவசம் போர்டு இதற்கு தடை விதித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநாட்டை தாங்களே நடத்துவோம் என தேவசம் போர்டு கூறியுள்ளது. கோவில்கள் மூலம் பாஜக வளர்கிறது என நினைத்து, அமைச்சர் மனோ தங்கராஜின் விருப்பப்படி தேவசம் போர்டு செயல்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, 6 தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரபரப்பான இந்த விழாவில் தேவசம்போர்டு மேலும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.
அமைதியாக நடந்து வரும் இந்த விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பிரச்னை செய்வதாக போலீசாரும், வருவாய் துறையினரும் புலம்பி வருகின்றனர்.
Discussion about this post