Google News
இந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்.
மண்டைக்காடு 85 ஆண்டுகளாக சமய சொற்பொழிவு நடந்து வருவது இந்து மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் மத மாற்றத்தை தடை செய்வதற்கும் இது மிகவும் துணை புரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சமய சொற்பொழிவு நடக்காது என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலைத்துறை மாநாட்டை நடத்த குமரி இந்துக்கள் அனுமதிக்க மாட்டோம் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளும் அரசும் செயல்பட கூடாது 1982 கலவரநிலைக்கு கொண்டுசெல்ல கூடாது.
மண்டைக்காடு கொடை விழாவில் மத்திய அரசு அமைச்சர்களும் வருவார்கள் குமரி மாவட்ட அது குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு இழுக்காதீர்கள் குமரி மாவட்ட அரசு அதிகாரிகள் இந்து விரோதமாக செயல்படுகிறார்கள்.
சமய மாநாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் தேவைப்பட்டால் மற்ற மாநில கவர்னர்களும் அழைக்கப்படுவார்கள் இந்த சமய மாநாட்டில் அரசியல் பேசினால் அரசு கண்காணிக்கட்டும் தடுக்கட்டும் நாங்கள் ஒத்துழைக்கிறோம் வேறு மதத்தை பற்றி இழிவாக பேசினால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும் சமய மாநாடு என்ற பெயரில் நிதி பணம் மோசடி செய்ததாக நிரூபித்தால் நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம் மார்ச் 5 தேதி மாநாடு நடத்த விடாமல் இருந்தால் பிரச்சனை ஆகி மார்ச் 8 தேதி முதல்வர் குமரி மாவட்ட வருகை ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது மண்டைக்காடு மண்டைக்காடாக இருக்கட்டும் அயோத்தி ஆக்காதீர்கள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்துக்கள் தங்கள் வீதிகளிலும், வீடுகளின் முன்பு அகல் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவும் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து இந்து ஆலயங்களிலும் விளக்குகள் ஏந்தி, மாநாடு வேண்டும் என பக்தர்கள் அரசை வலியுறுத்தி பிரார்த்தனை செய்ய உள்ளார்கள் என்று அவர் கூறினார்.
Discussion about this post