Google News
வியட்நாமில் பூமிக்கு அடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ‘சிவலயம்’ கண்டுபிடிப்பு.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்திய மண்ணை ஆண்ட மன்னர்கள் கடல் கடந்த பல நாடுகளில் தங்கள் ஆட்சியை நிலைநாட்டியுள்ளனர். இங்கிருந்து வெளியேறிய மக்கள் இன்னும் அங்கு வாழ்கின்றனர். இதற்கு ஆதாரமாக, இந்தியாவின் பல அண்டை நாடுகளில் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது பல கோவில்கள் மற்றும் கடவுள் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நாடு வியட்நாம்.
இந்நிலையில், வியட்நாமில் பூமிக்கடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் லாம் டோங் மாகாணத்தில் உள்ள கேட் டின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான கோயில் இதுவாகும். இந்த பகுதி 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வியட்நாமில் தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த இடம் 2 ஆம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post