Google News
தமிழகத்தில் கள்ள சாராயம் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கி இருப்பது வேதனை அளிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் கள்ளசாராயம் அருந்தி 20க்கு மேற்பட்டவர்கள் உயிர் நீத்த நிலையில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் கள்ள சாராயம் காய்ச்சியவனுக்கே ₹50000 நிவாரணம் அறிவித்தது, இரண்டு ஆண்டு கால வேதனை ஆட்சியில் சிகரம் தொட்ட சாதனை.
தமிழகத்தில் சாராய ஆறு ஓடி இளம் பெண்கள் தாலி அறுத்திட காரணமாக இருக்கும் இந்த விடியாத விடியல் அரசை கண்டித்து,
நமது மாநில தலைவர் #அண்ணாமலை ஜி ஆணைக்கிணங்க நாளை 20.05.2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்யாகுமாரி மாவட்ட மகளிரணி தலைவி வழக்கறிஞர் திருமதி.#சத்திய_ஸ்ரீ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
நமது மாவட்டத்தின் அனைத்து மகளிரணி நிர்வாகிகளும், கட்சியின் அனைத்து மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகளும் சாராயத்தை ஒழித்து கட்ட நினைக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஒன்றாக இணைந்து கலந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்.
Discussion about this post