Google News
மதமாற்ற எதிர்ப்பு போராட்டத்தில் தன்னைத்தானே ஆகுதியாக்கிய தஞ்சை மாணவி அரியலூர் லாவண்யா.
பத்தாம் வகுப்பில் 486 மதிப்பெண்கள் , பல கனவுகளோடு தாய், தந்தையர்.
அவளின் மரணம் நமக்கு கண்ணீரை வரவழைக்கலாம். என்ன கொடுமை என்று உச் கொட்ட வைக்கலாம். இதற்கு மேல் நம்மால் என்ன செய்யமுடியும்.
இதற்கு இந்து இயக்கங்கள் என்ன செய்தன? என்றுகூட சிலர் கேள்வி எழுப்பலாம்.
இந்த குழந்தையின் மரணத்திற்கு கண்டிப்பாக நீதி வேண்டும். நம் குழந்தைகளும் இவளை மாதிரியே, கிறித்தவ பள்ளிகளில் படிக்கலாம். நம் குழந்தைகளுக்கும் இம்மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் தவிர்க்க வேண்டுமென்றால், இந்நிகழ்வுக்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.
இக் குழந்தையின் இந்த அவல மரண செய்தியை பலர், பல குழுக்களில் கவலையோடு பகிர்வதை காணமுடிகிறது.
இதனால், செய்திகள்தான் மற்றவர்களுக்கு பரவுமே தவிர, எந்த தீர்வும் கிடைக்காது.
நான் எனது கடமைக்கு எனது நண்பர்களுக்கு செய்தியை பகிர்ந்தேன் எனது வேலை முடிந்தது என்று இருக்காமல், இச்சம்பவத்திற்கு தீர்வுகாண விரும்பினால் 24-01-2022 திங்கள் மாலை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தானும் கலந்து கொண்டு நமது நண்பர்கள் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளச்செய்து நமது எதிர்ப்பை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.
இம்மாதிரியான நிகழ்வுகளில் நமது எதிர்ப்பின் சக்தியே வரும் காலங்களில் இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
ஜெய் ஹிந்த் !
Discussion about this post