Google News
ரயில்வே பல்வேறு காலகட்டங்களில் வெளியிட்ட கால அட்டவணைகள் பிரகாரம் வரலாற்று சிறப்புமிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொகுப்பே இது.
பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலும், நாடு விடுதலைப் பெற்று சுமார் 15 ஆண்டுகளிலும் ரயில் வழிப் போக்குவரத்து சிறப்பாகவே இருந்துள்ளது. போக்குவரத்து வசதிகள் நவீனமாக்கலுக்குப் பிறகு பரங்கிப்பேட்டை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது.
1931 – சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவனந்தபுரம், கொழும்பு (இலங்கை) உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 18 ரயில்களில் 16 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
1961 – சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவனந்தபுரம், கொழும்பு (இலங்கை) உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 24 ரயில்களில் 16 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
1977 – சென்னை, திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 22 ரயில்களில் 14 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
1980 – சென்னை, திருச்சி, விழுப்புரம், செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 22 ரயில்களில் 14 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
1995 – சென்னை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 12 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
2004- தாம்பரம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 10 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
2005- தாம்பரம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 10 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
2006- தாம்பரம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 10 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன.
அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மட்டும் செல்லும் ரயில்கள் 6 ரயில்கள் மட்டும், மேலதிகமாக பெங்களுர் – காரைக்கால் செல்லும் இரண்டு என மொத்தம் 8 ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்கின்றன.
பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் ஒன்றுகூட இங்கு நின்று செல்வதில்லை.
இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டும் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கற்களாகவே உள்ளன.
பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் சில ரயில்களை இங்கு நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இந்திய இரயில்வே அமைச்சகம், அது ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட ஊர் / கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
Discussion about this post