Google News
இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘#விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்:………….
“குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது.
குமரன் காத்த கொடி இதுவல்ல; காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய் எத்தனை முறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும். கடைசியாக இருந்த கட்சியின் கொடி அமைப்பில், இராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பதித்து மத்தியில் வைத்து இதுதான் அரசாங்கக் கொடி தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான்” என பெரியார் அறிவித்தார்..
Discussion about this post