Google News
தாராபுரத்தில் கல்லூரி மாணவியை சிலர் கடத்தி சென்று கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைத்திருப்பதாக பெற்றோர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி, சில நாட்களுக்கு காணாமல் போயுள்ளார். அவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிப்பதாகவும், கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும் புகார்கள் எழுகிறது.
இது குறித்து கல்லூரி மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனது மகள் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், அவர் கடந்த 24ம் தேதி கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. அன்றே திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் தங்களை அழைத்தனர். அப்போது உங்கள் மகள் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையம் வந்திருக்கிறார். எனவே பெற்றோர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என தங்களை அழைத்தாக கூறினர்.
Discussion about this post