Google News
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஏன் ஈவெரா வை கைது செய்யவில்லை என சட்டசபையில் 11/03/1966 அன்று வினவியுள்ளார்.
விசயம் இது தான், ஈவெரா 05/02/1966 ல் விடுதலை பத்திரிக்கையில் ஒரு தலையங்கம் எழுதினார் ,
தலைப்பு : கம்யூனிஸ்டும் நானும் என்பது தான் அது,
அதில் “நாளைக்கு ரஷ்யாக்காரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால் நான் ரஷ்யாவை ஆதரித்து அதனால் கொல்லப்படவோ இல்லை இந்த நாட்டில் சிறைப்படவோ தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக இருக்க ஒரு நிமிஷமும் சம்மதிக்க மாட்டேன் இத்தனைக்கும் நான் ஒன்பது மாற்றுக் கம்யூனிஸ்டு காரனுமல்ல” என்று தலையங்கம் எழுதியிருந்தார் ஈவெரா.
அவர் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதால் தேசிய பாதுகாப்பு சட்டம் என்னவானது மழுங்கி அவர் காலடியில் மண்டியிட்டதா என்று சட்டசபையில் வினவினார் கருணாநிதி.
Discussion about this post