Google News
திரும்ப திரும்ப விலை போன தமிழ் மீடியாக்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோமே ! நாம் முட்டாள்கள் தானே ? பின் என்ன அறிவு ஜீவிகளா ?
PSSB School ஆசிரியர் திரு ராஜகோபால் விடுதலை ஆனதை ஏன் மறைத்தீர்கள் என்று இந்த மீடியாக்களை நாம் கேட்டோமா ? இல்லையே !!
இல்லை மான்புமிகு நீதிமன்றம் அரசு தரப்பை 5 ஆண்டுகளுக்கு முன்னால் online classes எங்கே இருந்தது என்றுகேள்வி கேட்டு கண்டித்ததையும் அரசு தரப்பு அசிங்கப்பட்டதையும் நீங்கள் வெளியிடவில்லையே என்று இந்த அசிங்கப்பட்ட மீடியாவை கேட்டோமா ?
இல்லை ஆசிரியர் ராஜ கோபாலுக்கு எதிரான புகார்கள் எல்லாமே முன்னாள் மாணவர்கள் மட்டும் தானா என்ற நீதிமன்றத்தின் கேள்விக் கணைகளுக்கு பதில் கூற முடியாமல் முழி பிதுங்கி அரசு தரப்பு அசிங்கப் பட்டதையும் நீங்கள் வெளியிடவில்லையே என்று தான் கேட்டோமா ? இல்லையே !
ஆசிரியர் ராஜ கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ததின் காரணங்களை விளக்க முடியாமல் அரசு தரப்பு அவதிப்பட்டதை ஏன் வெளியிடவில்லை என்று தான் கேட்டோமா ? இல்லையே !!!
அல்லது இந்த விஷயத்தில் அப்பட்டமாக தேதிகளைத் திருத்தி நீதிபதியின் கண்டனத்திற்கு ஆளாகி அரசு தரப்பு அசிங்கப்பட்ட விஷயத்தை நியாயமான மீடியாக்கள் போல் நாடகமாடும் இவர்கள் மறைத்து விட்டதைத் தான் கேட்டோமா ?
அல்லது அப்போது PSSB பள்ளியை மூட வேண்டும் என்று கோஷ மிட்டவர்கள் இன்று மாணவி லாவன்யாவின் தற்கொலை மரணத்திற்காக சம்பந்தப் பட்ட பள்ளியை மூடச் சொல்லி கோஷமிடாததைப் பற்றி மௌனமாக இருக்கிறீர்களே என்று இந்த போலி மீடியாக்களைப் பார்த்து கேட்டோமா ? இல்லையே !!!!
அன்று மாணவி அனிதாவின் பெயரில் அரசியல் செய்தவர்கள் இன்று மாணவி லாவன்யாவின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று கதறுவது நியாயமில்லை என்று நீங்கள் ஏன் செய்திகள் வெளியிடுவதில்லை என்றாவது இந்த போலி மீடியாக்களை கேள்வி கேட்டோமா ? இல்லையே!!!
அல்லது அன்று அனிதா விஷயத்தில் “இதை நாங்கள் தற்கொலையாக அல்ல கொலையாகக் கருதுகிறோம். அது நிர்மலா சீதாராமனோ அல்லது எடப்பாடியோ அனைவரும் பதவி விலகவேண்டும்” என்று கூவியவர்கள் இன்று பதவி விலகாமல் இருக்கிறார்கள் என்று கேள்விகளை மீடியாக்களான நீங்கள் எழுப்பாதது ஏன் என்று தான் கேட்டோமா ? இல்லையே !!
இந்த விலைபோன போலி மீடியாக்களைத்தானே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
இவர்கள் பத்திரிகை தர்மத்தை தூக்கி எரிந்துவிட்டு காசுக்குப் பின்னால் ஓடும் கயவர்கள். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் sensational news and TRP. பத்திரிகை தொழில் தர்மமெல்லாம் நேற்றோடு காற்றில் போய்விட்டது.
நாம் இன்னமும் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருகிறோம். பின் நாம் முட்டாள்கள் இல்லாமல் வேறென்ன ? எந்த விதத்தில் நாம் அறிவாளிகள். உண்மையை ஒப்புக் கொள்வோம். வேண்டுமானால் நாசுக்கான வார்த்தைகள் கொண்டு சொல்ல வேண்டுமானால் அப்பாவிகள் வெள்ளேந்திகள் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம்!!!!!
Discussion about this post