Google News
பஞ்சாங்க குறிப்புகளில் உள்ள அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை மற்றும் அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த அக்னி நட்சத்திரதில் சுபகாரியங்கள் செய்யலாம் ஆனால் சில காரியங்கள் செய்யக்கூடாது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன
சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களுக்கு பெயர் தான் அக்னி நட்சத்திரம்.
இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
பஞ்சாங்கத்தின் படி 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தை விட இந்த நாட்களில் சூரிய பகவான் அதிக உஷ்ணத்தை கொடுக்க கூடிய நாட்களாக இருக்கும்.
இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை
- பூணுல் போடுவது செய்யலாம்
- திருமண பொருத்தம் பார்க்கலாம்
- மாப்பிளை பெண் வீட்டுக்கு செல்லலாம்
- திருமண நிச்சயம் செய்யலாம்
- ஒப்புதல் தாம்பூலம் செய்யலாம்
- திருமணம் செய்யலாம்
- மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்
- யாகங்கள் செய்யலாம்
- சத்திரங்கள் கட்டலாம்
- வாடகை வீடு குடி போகலாம்
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை
- செடிகள், மரங்கள் வெட்டுவது அக்கினி நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.
- நிலம், வீடு வகைகள் ஆரம்பிக்க கூடாது. (வீடு கட்டுவது)
- விதை விதைத்தல் செய்யக்கூடாது
- கிணறு வெட்டக்கூடாது
- புதுமனை புகுதல் கூடாது
- தீட்சை எடுத்தல் செய்யக்கூடாது
- மொட்டை அடித்தல், காது குத்துதல் செய்யக்கூடாது
- வாகனம் ஏறுதல் அதாவது வாகனம் வாங்குவது போன்றன செய்யக்கூடாது
- கோவில் கும்பாவிஷேகம் செய்வது சிறப்பானது அல்ல
- கூரை மேயக்கூடாது
Discussion about this post