Google News
சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாற்றில், இம்முறை அதிக சுற்றுலாப் பயணிகளைக் கண்டுள்ளது.
காஷ்மீர், ஜனவரி 2022 முதல் இதுவரை, 1 கோடியே 62 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளனர் என்று ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இந்த ஆண்டுதான் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. அதன்பிறகு, கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து தற்போது 1.62 கோடியை எட்டியுள்ளது.
Discussion about this post