Google News
எதிர்க்கட்சி கூட்டணியின் முந்தைய பெயர் ஊழலுடன் தொடர்புடையது என்பதால், எதிர்க்கட்சியான அதன் பெயரை இந்தியா கூட்டணி என மாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தங்கள் புதிய கூட்டணிக்கு (எதிர்க்கட்சிகள்) புதிய பெயர் வைத்துள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் செயல்பட்டு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளனர். லாலு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் அவர்களால் மீண்டும் பிரச்சாரம் செய்ய முடியாது. அதன் காரணமாக இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் ராமன் சரிதமானஸை மதிக்கவில்லை. ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறையை நீக்கிவிட்டனர். இந்த முடிவுக்கு எதிராக நின்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Discussion about this post