Google News
கன்யாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
கன்யாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. கன்யாகுமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, விநாயகர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனால் நேற்று விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவியை பொறுத்த வரை மீனாட்சிபுரம் யூமுஷ் விநாயகர் கோவில், கோட்டார் செட்டிநாயனார் தேசிக விநாயகர் தேவஸ்தான கோவில், வடசேரி விஜய கணபதி கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் பக்தி சொற்பொழிவு மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. மேலும் கோவில்களில் உள்ள விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
சிலைகள் பிரதிஷ்டை
மேலும் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தங்கள் வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் விநாயகருக்கு மாலை அணிவித்து அவருக்கு பிடித்த அவல், பொரி, கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.
இதேபோல் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா போன்ற இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களிலும், கோயில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளும், பொது இடங்கள் மற்றும் கோவில்களில் 2 அடி முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தக்கலை
தக்கலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமய வகுப்பு மாணவர்களின் பஜனை ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கன்யாகுமரி மேற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா போன்ற அமைப்புகள் சார்பில் பொது இடங்கள் மற்றும் கோயில்களில் 2500க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன.
வாய்மொழி
ஆரல்வாய்மொழி பகுதியில் வடகூர், சுப்பிரமணியபுரம், கணேசபுரம், வடக்கு பெருமாள்புரம் வெள்ளமடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து மகாசபை மற்றும் இந்து முன்னணி சார்பில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் தினமும் காலை மற்றும் மாலையில் வழிபாடு செய்யப்படுகின்றன. இந்து மகாசபை சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 23ம் தேதி ஊர்வலமாகவும், 24ம் தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாகவும் எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளடிச்சிவிளை செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கன்யாகுமரி மாவட்ட பாஜக பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன், பாஜக மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் ஆய்வு செய்தார்.
Discussion about this post