Google News
கன்யாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து கன்யாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெறவுள்ள ‘குமரி திருவிழா 2023’ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ‘குமரி திருவிழா 2023’ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிர்வாகம், ”மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் இவ்விழா நடத்தப்படும். பல்வேறு இடங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, கோடை விழா என சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடத்தப்படும்.
காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மீன்வளத்துறை, ஆவின், கைத்திறன் வளர்ச்சி கழகம், கைத்தறி போன்ற துறைகள் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
விழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித்துறை சார்பில் தினமும் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் கன்யாகுமரி மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்,” என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பாபு, நாகைகோயில் வருவாய் கோட்டாட்சியர் கே.சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) ஹனிஜெய் சுஜாதா, துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) ஷீலஜன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (நகராட்சிகள்) விஜயலெட்சுமி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post