Google News
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமியின் 608 பக்க விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி உயிரிழந்ததாகவும், அதை 2 பேர் நேரில் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் விரிவான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமியின் 608 பக்க விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை குறித்த உண்மை நிலையை அறிய விசாரணை தேவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மயங்கி விழுந்த பிறகு நடந்த சம்பவங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது. டாக்டர்கள் கூறியபடி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்காதது ஏன்? என்ற கேள்வியும் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில் டிசம்பர் 4ம் தேதி மதியம் 3.30-3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.ஆனால் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.
Discussion about this post