Google News
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியன் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறான். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் 2 வாரங்களில் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்று ஜோதிடர்கள் கூறுவர்.அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் பகுதி நாட்களை மக்கள் பின் ஏழு, முன்னேழு என கூறி கணக்கிடுவது வழக்கம்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டிவிடும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.
அக்னி வெயில் காலகட்டத்தின்போது மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
கத்திரி வெயில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் நுங்கு, இளநீர் போன்றவற்றையும் உட்கொண்டு உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மக்களின் வழக்கம். அதனை இந்த ஆண்டும் கடைபிடித்து வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
Discussion about this post