Google News
கர்நாடக மாநிலத்தில் உள்ள பழைய மதரஸாவில் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் தொடங்கி பல சர்ச்சைகள் உள்ளன.
இதற்கிடையில், அங்குள்ள மதராசா ஒன்றில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் பழமையான மஹ்மூத் கவான் மதரஸா உள்ளது. 1460களில் கட்டப்பட்ட இந்த மதரஸா தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இந்த பழமையான மஹ்மூத் குவான் மதரஸா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பழமையான இந்த மதரஸாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதரஸா
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் திடீரென மதரஸாவில் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் திடீரென கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பழைய மதரசாவில் பூஜையும் செய்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கோஷங்கள்
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன. மதரஸாவுக்குள் புகுந்த கும்பல், ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘இந்து தர்மம் வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பியது. அதன்பின் ஒரு மூலைக்குச் சென்று பூஜை செய்தனர். கட்டிடத்திற்குள் நுழைய முயலும் பெரும் கூட்டம் வெளியில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போராட்டம்
இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் பல்வேறு முஸ்லீம் அமைப்பினர் பிதாரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்களை கர்நாடக அரசு ஊக்குவிப்பதாக முஸ்லிம் லீக் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.
குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சில பகுதிகளில், பாஜக வகுப்புவாத மோதல்களைத் திட்டமிட்டு அரசியலை துருவப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹிஜாப் சர்ச்சைக்குப் பிறகு பல சர்ச்சைகள் எழுந்தன. இந்து கோவில்களுக்கு முன்பாக இருந்த முஸ்லிம் வியாபாரிகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஹலால் கறிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஈத்கா மைதானத்தில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post