Google News
தலித் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் செங்கோட்டையன், காப்பகம் முன்பு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘நீதி கிடைக்க வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததை அரசியலாக்க வேண்டாம் என தலித் விடுதலைக் கட்சியினருடன் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்தனர்.
திருப்பூர் அவினாசி சாலையில் விவேகானந்தா சேவாலயம் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தலித் விடுதலைக் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன், காப்பகம் முன் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘நீதி கிடைக்க வேண்டும்’ என, கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் வாதிட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Discussion about this post