Google News
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டர் தளத்தில் உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணிக்கு தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி உரையாற்ற உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், 240 எழுத்துகளுக்குள் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த முடியும். மேலும், பதிவை திருத்த முடியாது. சமூக ஊடகங்களைத் தாண்டி, கருத்துப் பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ட்விட்டர் ஸ்பேஸ் என்ற வசதியை ட்விட்டர் உருவாக்கியுள்ளது.
இதில், பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டர் தளத்தில் உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு என்ற பெயரில் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் தளத்தில் உரையாற்றுகிறார்.
Discussion about this post