Google News
கோவையில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்று கொண்டிருந்த போது, மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மும்மொழி வாசகம் அச்சிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், ஆட்சிப் பொறுப்பில் இல்லாத பாஜக மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி விழா மேடையில் அமர்ந்திருப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த உத்தம ராமசாமி சமீபத்தில் திமுக எம்பி ஆ.ராசாவை அவதூறாக பேசியதற்காக சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வியை சிலர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மும்மொழி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேற்று ‘விவசாயி கூட்டம்’ நடந்தது. இவ்விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மேடையில் அச்சிடப்பட்டிருந்த பேனரில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று ஏற்கனவே பாஜக கூறி வரும் நிலையில், பொதுவெளியில் அரசு நடத்தும் நிகழ்ச்சியில் இந்தி மொழி எப்படி இடம் பெற்றுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இந்தி மொழியை திணிக்காதீர்கள் என்று சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். தமிழக அரசியல் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களை கையில் ஏந்தியபடி இருந்தனர்.
பா.ஜ.க
எனவே இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பதில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் அரசு நடத்தும் விழாவில் இந்தி எப்படி இடம்பெறும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதேபோல், விழா மேடையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் அமர்ந்திருந்த போது, ஆட்சிப் பொறுப்பில் இல்லாத பாஜக மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமியும் ஒன்றாக அமர்ந்திருந்தார். இந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வலியுறுத்தல்
அவருக்கு இருக்கை ஒதுக்கியது யார்? மேலும், இதை அரசு மற்றும் பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கிறதா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகமும் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தம ராமசாமி திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில், ‘தைரியம் இருந்தால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் ஆ.ராசா காலடி எடுத்து வைப்பதைப் பார்ப்பேன்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post