Google News
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், பாஜக குடும்ப ஆட்சி கட்சி அல்ல என்றும், இங்கு தாமரை மலரும் என்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வளர்ச்சிப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இங்கு நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிற்கும் இதுவே சரியான நேரம்.
தாமரை மலர்கிறது
ஒவ்வொரு முறையும் நல்ல நேரம். பூமியின் சேற்றில் இருந்துதான் தாமரை மலரும். அதுபோல எங்கெல்லாம் பாவமோ, எங்கெல்லாம் கஷ்டமோ அங்கேதான் நம் தாமரை மலரும். தமிழகத்தில் தாமரை மலர்கிறது. இங்கு ஊழலை ஒழிப்போம். இங்கு நல்ல ஆட்சியையும் வழங்குவோம்.
குடும்ப அரசியல்
நமது தமிழக கொள்கையில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை. பாஜக குடும்பம் நடத்தும் கட்சி அல்ல. இங்கு 2 அல்லது 3 குடும்பங்கள் அரசைக் கட்டுப்படுத்தவில்லை. இங்குள்ள நமது தொண்டர்கள் ஒவ்வொருவரும் எழுந்து மாநில நலனுக்காக பாடுபட வேண்டும்.
மோடி மீது அன்பு
தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். பாரதீய ஜனதா கட்சியினர் உங்கள் அனைவரிடத்திலும் பிரதமர் மோடியின் மீதுள்ள அன்பையும், பற்றுதலையும் இங்கு காணமுடிகிறது. இதை பார்க்கும் போது, தமிழகத்தில் பா.ஜ., நிச்சயம் எழுச்சி பெறும் என நம்புகிறேன்,” என்றார்.
ஏற்றுமதியாளர்கள் மாநாடு
முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பியூஷ் கோயல், “இந்தியாவைக் கட்டியெழுப்பவும், நமது நாட்டின் அன்னியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் மகத்தான பங்களிப்பை அளித்து வரும் தமிழகத்தால் இந்தியாவே பெருமை கொள்கிறது” என்றார். என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post