Google News
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக அரசியல் சாசனத்தை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஜனநாயக கடமையை நிறைவேற்றவே அதிமுக சார்பில் சட்டசபைக்கு வந்துள்ளேன் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரை அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தித்தனர். அ.தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிய வரும் நிலையில், இந்த கூட்டம் அதிமுகவினரின் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகியோர் சரியாக 9.50 மணிக்கு சட்டப் பேரவை வளாகத்திற்குள் ஒன்றாக வந்தனர். பேரவை வளாகத்துக்குள் நுழைந்து கையெழுத்திட்டதும் சட்டப் பேரவை துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயக கடமையாக அ.தி.மு.க., சார்பில் சட்டசபைக்கு வந்துள்ளோம், இ.பி.எஸ்., அ.தி.மு.க., தொண்டர்கள் இயக்கம் குறித்த கேள்வியை, அவரிடம் கேட்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், 16 ஆண்டுகள், சிறப்பான ஆட்சியை, ஜெயலலிதா நடத்தி வந்தார். .இரு தலைவர்களின் தியாகமும், தொண்டர்களின் ரத்தமும் இதை உருவாக்கியது.அ.தி.மு.க
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட அதிமுகவின் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதிகாரபூர்வ ஆய்வுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார் அவர்.
பாதுகாவலர்களுடன் சட்டசபைக்கு ஏன் வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுடன் யாரும் வரவில்லை. அது தவறான தகவல்,” என்றார்.
Discussion about this post