Google News
கோவையில் நடந்த கார் வெடி விபத்து அதிர்ச்சி அளிப்பதாகவும், பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை கொட்டமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலிண்டர் வெடிப்பு
இதையடுத்து விபத்து நடந்த பகுதியின் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து குறித்து விசாரணை மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கார் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியதில் சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
டிஜிபி சைலேந்திர பாபு விசாரணை
இதையடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். கார் வெடிப்பு சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரில் இருந்த இரண்டு சிலிண்டர்களில் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
6 குழுக்கள் அமைப்பு
சிலிண்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மொத்தம் 6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. என்.ஐ.ஏ.வுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து விசாரணைக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்ணாமலை ட்வீட்
இந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை உக்கடம் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும் கார் வெடிவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தில் கோவை மக்களின் அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களை காக்க
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தியதை பாஜக வரவேற்கிறது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயலும் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய காவல்துறையின் பொறுப்பை கருத்தில் கொண்டு, இந்த வெடிவிபத்தில் உள்ள மர்மத்தை களைய போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post