Google News
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக, திமுக என்றில்லாமல், மூன்று பேரும் பங்காளியாக போட்டியிடலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பாஜக கூட்டணியில் யார், யார் இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக, காங்கிரஸ் தவிர அனைவரும் எங்கள் பக்கம் வர வேண்டும் என்றார்.
அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
விசிக, மதிமுக கூட்டணி சேர்ந்தால் சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஜாதியற்ற சமுதாயத்தை திருமாவளவன் உருவாக்க வேண்டும் என்றார். அப்படி நடந்தால் எங்கள் கூட்டணியில் சேர அவரும் சரியானவர் என்றார்.
அதிமுக பிரச்சனையை எப்படி பார்க்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பிரச்சனை உள்கட்சி பிரச்சனை என்றும் அதில் பாஜக தலையிட முடியாது என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் பாஜக ஏன் இன்னும் பெரிய இடத்தை அடையவில்லை என்ற கேள்விக்கு, அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய ஆளுமைகள் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார். அவர்களை எதிர்த்து யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக மட்டும் எப்படி மேலே வர முடியும். அதனால்தான் வரமுடியவில்லை. ஆனால், தற்போது பாஜக மக்களுடன் இணைய முயற்சிக்கிறது என்றார்.
தமிழகத்தில் திமுக vs அதிமுக என்ற நிலை பாஜக Vs ஆகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாமும் பங்காளிகள் தான், மூவரும் இணைந்து பங்காளிகளாக போராடலாம் என்றார்.
எது பெரிய கட்சி, அதிமுக கூட்டணியா அல்லது பாஜக கூட்டணியா, அதிமுக பெரிய கட்சியா என்ற கேள்விக்கு, சித்தாந்த ரீதியாக திமுக அவர்களுடன் போட்டியிடுகிறது. ஆனால், அதிமுகதான் மிகப்பெரிய கட்சி என்றார்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் நிற்க விரும்பவில்லை என்றும், 2026ல் தமிழகத்தில் பா.ஜ.க.வை கொண்டு வருவதே எனது இலக்கு என்றும், அதற்கான பாடுபட்டு வருவதாகவும் கூறினார்.
இப்படியிருக்கையில் 2026ல் தமிழகத்தில் பாஜக எப்படி வரும், நம்பிக்கைதான் எல்லாம், மக்கள் நம்பினால் ஒரே இரவில் எல்லாம் மாறிவிடும் என்றார்.
Discussion about this post