Google News
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பொதுப்பணித்துறை மூலம் பல கோடி ரூபாய் செலவில் ஏரிகளை சீரமைக்கும் தரமற்ற பணியை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 30 ஏரிகளில் தரமற்ற சீரமைப்பு பணிகள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் பாஜக மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் டி.வாசன், மாவட்ட துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் செந்தில் குமார், காஞ்சிபுரம் நகர மேற்கு மண்டலத் தலைவர் ஜீவானந்தம் ஞான சூர்யன், கட்சியின் பல்வேறு அணிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து.
Discussion about this post