Google News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமைக்கப்பட்ட 10 திமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவேரா, ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.திருமகன் ஈவேராவின் மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாகவும், பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், மறுபுறம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஈரோட்டில் களப்பணியை முழுவீச்சில் தொடங்கியுள்ளது திமுக. ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி முழுப்பொறுப்பேற்கிறார்.இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமைச்சர்கள் 11 பேர் முற்றுகையிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் திமுகவின் கரை வேட்டிதான். ஒருபுறம் திமுகவினர் பணம் விநியோகம் செய்வதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மறுபுறம், திமுக நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பினர்.
மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் கொட்டகை அமைத்து டீ, பணம் விநியோகம் செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 10 பணிகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 10 திமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரோடு கிழக்கில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. -தேர்தல்.
இதுபோன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் பெரிய அளவில் மீறப்பட்டால், ஈரோடு இடைத்தேர்தலை தள்ளி வைக்கும் சூழல் உருவாகும். தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Discussion about this post