Google News
உதயநிதி ஸ்டாலின், கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மதியம் 1.30 மணியளவில் டெல்லி கிருஷி பவனில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் மானியம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திமுக எம்பி கவுதம் சிகாமணி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். உதயநிதி, கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இது தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளித்தார். அதைக்கேட்டு நீட் தேர்வு என்பது தமிழக மக்களின் நிலைப்பாடு. அதற்கான சட்டப் போராட்டம் தொடரும்’’ என்றார்.
Discussion about this post