Google News
கருவேல்நாயக்கன்பட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெகத்பிரகாஷ் நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருங்கோட்டை பொருளாளர் நரசிங்க பெருமாள், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தரராஜன், மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி, தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் தேனி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post