Google News
2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்று இப்போதே ஊடக விவாதங்கள் தொடங்கிவிட்ட நிலையில், திமுகவை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, திமுகவை எதிர்க்காமல் கூட்டணிக் கட்சியான பாஜகவை தினம் தினம் எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் எப்படியாவது ஜெயித்துவிடலாம் என்று நினைத்த திமுகவுக்கு கோட்டையாக கருதப்படும் சென்னையில் மக்கள் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு, பல பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தை விட மின்கட்டணம் அதிகரித்துள்ளது என்பது பலரது முதல் குற்றச்சாட்டு.
உண்மையில் ஆளுங்கட்சிக்கு இயற்கையாகவே எதிர்ப்பு வருவது இயல்புதான் ஆனால் மின்சாரக் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, அதிகரிப்பு என்று எதிர்ப்பை பதிவு செய்து ஆளும்கட்சியின் ஆட்சி சரியில்லை என்று பொதுவாக மக்கள் சொன்னால் பரவாயில்லை. அன்றாட செலவுகள் திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக படுதோல்வி அடைந்த காலத்திலும் திமுகவுக்கு கை கொடுத்த பகுதிகளில் சென்னையும் ஒன்று, ஆனால் அதே சென்னையில் பெண்கள் திமுக ஆட்சிக்கு எதிராக கருத்து பதிவு செய்வது திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் கனவை உலுக்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 1000 ரூபாய் கொடுத்து எப்படியாவது மனதை மாற்றிவிடலாம் என்று கணக்கிட்டு. இத்தேர்தலில் திமுகவின் தீவிர எதிர்ப்பை எதிர்கொள்ளப் போகும் கட்சிக்கே மக்களின் வாக்குகள் செல்லப் போகிறது என்பது தெளிவாகிறது.
Discussion about this post