Google News
தமிழகத்தில் திராவிடக் கூட்டணி வேண்டாம் என்ற அண்ணாமலையின் நிலைப்பாட்டுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக இருந்த கங்காதேவி தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமி, மதுபாலன், செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரான்சிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மகளிர் அணி செயலாளர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராணி நாச்சியப்பன் பாஜகவில் இருந்து விலகினார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள சிட்லபாக்க ராஜேந்திரன் திடீரென அதிமுகவில் இணைந்தார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை குறிவைக்கும் காரணம் என்ன??? சென்னை அரும்பாக்கம் பா.ஜ.க கமலாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், எதிர்காலத்தில் கூட்டணி கட்சிகளுடன் சேராமல் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார். மேலும், திராவிடக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், அவ்வாறு செய்ய வேண்டுமானால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அதிமுகவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அக்கட்சிக்கும் அண்ணாமலைக்கும் பெரும் வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக கட்சியின் வளர்ச்சி தமிழகம் எங்கும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் பலர் பாஜகவில் சேர விரும்புவதாகவும் அண்ணாமலை அவ்வப்போது தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் பாஜகவில் இணைந்தனர். மேலும் தமிழகத்தில் அண்ணாமலை நல்ல தலைவர் என்ற பேச்சு மக்களிடையே உள்ளது. இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘தமிழகத்தில் பாரதிய ஜனதா எதிர்க்கட்சியாகிவிடுமோ என்ற அச்சத்தில், தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராகிவிடுமோ என்ற அச்சத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு வலை வீசுகிறார்’’ என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள்.
மேலும் திராவிடக் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக கைகோர்க்கக் கூடாது என்ற அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பாஜக கட்சி நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகிறார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post