Google News
காங்கிரஸ் தொண்டர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவுரை கூறியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஹரிஹரா தொகுதி எம்எல்ஏ ராமப்பா காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ராமப்பாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். தொண்டர்களுக்கு சித்தராமையா அறிவுரை கூறியபோது கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post