Google News
செந்தில் பாலாஜி வழக்கு அமலாக்கத் துறை, கடந்த 2015ம் ஆண்டு, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. அதாவது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த 2015ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 2018ல் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டது, அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது டிரைவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். 2021 ஆம் ஆண்டில், செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க இயக்குனரகமும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டு அதன் படி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் மாறி மாறி நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், போக்குவரத்துத் துறையில் பணி வழங்குவதாகப் பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் தொடக்கத்திலிருந்தே விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவை, குழுக்கள் அமைக்கப்பட்டு வழக்கின் முழு விவரங்களுடன் வழக்கை விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கின் முழு அறிக்கையை அமலாக்கத்துறை தொடங்க உள்ள நிலையில், நேற்று காலை லைக்கா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறை இந்த மாதம் இரண்டு முறை ரெய்டு நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையின் கவனம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குவிந்துள்ளது.
இது தவிர, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தலையிடக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி ஆரம்பம் முதலே சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் போராடி வந்தார். தற்போது செந்தில் பாலாஜியின் விருப்பத்திற்கு மாறாக, அரசியல் தலையீடுகளை மீறி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கப் போவதால் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் பயந்துள்ளார்.
Discussion about this post